கருங்கடுக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பழமலத்தைப் போக்கும் பகரில் உடலுக்
கழகுதரும் புத்தி அளிக்கும் - பழகி
மருங்கடுத்த வாதபித்த வன்கபத்தைத் தீர்க்குங்
கருங்கடுக்காய் என்றுளத்திற் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
கருங்கடுக்காய் மலக்கட்டையும் திரிதோடத்தையும் போக்கி அழகையும், அறிவையும் கொடுக்கும்