நல்லதும் கெட்டதும்

இனித்திடும் ஆப்பிள்
இதயத்திற்கு வலிமை
கசந்திடும் அதன்
விதையோ தின்ன
நமனாய் முடிந்திடும்
ஆனால் விதையில்லாது
ஆப்பிள் மரமேது
இதுயென்ன 'சூத்திரக்காரனின்;
'சூதா' இல்லை
நல்லதை நாடு
தீதின் பக்கம்
செல்லாதே என்று
இங்கிதமாய் உணர்த்துகின்றானோ
எல்லாம் படைத்தவன் இப்படி

புரியாதது போல
இருக்கும் சொற்களின்
கட்டுக்குள்ளே புதைந்து
கிடைக்கும் வாழ்க்கைக்கு
பல இரகசியங்கள்
கரடு முரடான பலாவின் உள்ளே
கிடைக்கும் இனிய
பலாப்பழ சுளைகள்போல
நமக்கு கிடைக்கும்
'சித்தர்கள்' பாட்டு
சித்தர்கள் பாட்டு
'சிவன் வாக்கு' என்பர்
கற்றறிந்த ஞானிகள்

நல்லதும் கெட்டதும்
எல்லாம் அவன் செயலே
நல்லதையே நாடுவோம்
தீயதை நாடாது
இனிதே வாழ்ந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jul-22, 4:33 am)
பார்வை : 86

மேலே