அவள் கன்னத்து குழிகள்
என்னைப் பாத்தாள் அவள் மெல்ல
புன்னகைத்தாள் பின் சிரித்தாள் அவள்
கன்னம் இரண்டிலும் காந்த குழிகள்
என்னுள்ளம் அவள் பக்கம் அவள்
திறந்த இதழ்கள் மூட மெல்லமறைந்தன
அவள் கன்ன குழிகள் அதில்
மீளா புதையுண்டது என்னுள்ளம்