என்னையே உன்னில் தொலைத்து விட்டேன்
மின்னலை விழியிலேந்தி கூந்தலில் முகிலைத் தாங்கி
கன்னத்தில் குழிவு காதல் கவிதை எழுதும்
உன்னையே பார்த்து உன்நினைவிலே மூழ்கித் திளைத்து
என்னையே உன்னில் நான்முற்றிலும் தொலைத்து விட்டேன்
மின்னல் விழியினில் கார்முகில் கூந்தலில்
கன்னக் குழிவுகள் காதல் எழுதிடும்
உன்நினைவி லேநாளும் மூழ்கியே நான்உன்னில்
என்னைத் தொலைத்துவிட் டேன்
---முறையே கலித்துறை வெண்பா