இலங்குகின்ற துயரெல்லாம் ஈண்டவர்க்கு என்றும் வேண்டேன் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 3, 5 சீர்களில் மோனை)
தலைக்கனந்தான் உள்ளோர்க்குத் தலைநோவு வந்திடுமே
,,தானு ணர்வீர்;
அலைக்கழித்தே ஏசிடுவார் அன்பில்லாக் குணத்தாராய்
..அல்லல் தந்து;
கலங்கடித்தே அவதூறாய்க் கள்ளமுடன் பேசிடுவார்
..கனிவே யின்றி;
இலங்குகின்ற துயரெல்லாம் ஈண்டவர்க்கு வந்திடுமோ
..என்றும் வேண்டேன்!
- வ.க.கன்னியப்பன்

