குற்றவுணர்வு
புத்தம் புதிதாகவொரு
"நட்பு" பெற்றிடும்
பேராவல் உந்தித்தள்ள
காலம் கடந்த
நட்பாயினும் கடவுள்
கண் திறந்தார்
என்ற பெருமகிழ்வு
மனம் கவ்வ
உன்னுடன் கதைக்க
கணப் பொழுதும்
சிந்திக்காமல் முன்
வந்த நான்...!
குற்றம் புரிந்திட்ட
வேதனை மனதை
அழுத்த, செயற்கறியாது
திகைத்து மனம்
மருகுகிறது...!
குற்றவுணர்வு மனதில்
குளிப்பறிக்க குருதி
கொப்புளிக்கும் மனதில்
வேதனையும் குறையாமல்
நீளும் அதிசயம்
நிகழ்ந்தேறுகிறது...!
உனக்குள் கட்டவிழும்
மனதைப் படைத்திட்ட
பரம்பொருள், மருகும்
வேதனையை எனக்குள்
படைத்து எனை
கேலிச் சித்திரமாக்கி
கைக்கொட்டி சிரிக்கும்
அவளை யென்செய்தால்
தகும்...!
குற்றவுணர்வை குழி
தோண்டி புதைக்கும்
கலை கற்றறியாத
கட்டுப்பெட்டி நான்,
நாவிற்கு கட்டுப்படும்
பண்புமட்டும் அறிந்த
அருமங்கை நான்...!
நானென் செய்வேன்?
குற்றம் புரிந்திட்ட
உணர்வில், குருதி
காணக் கிடைக்காது
ஆயினும் வலியின்
உச்சம் உணரும்
பெண்...!