உங்களுக்கென்ன வந்தது

பெற்றவர்களுக்குத் தம் பிள்ளைக்கு
பெயர் வைக்க உரிமை இல்லையா?
உலகத் தமிழர் யாரும் தம் பிள்ளைக்கு
வைக்காத இந்திப் பெயரைத் தேர்வு செய்து
அழகான எங்கள் பெண் குழந்தைக்குச் சூட்டினோம்
'நக்ஷா' என்ற இனிய பெயரே அது.
பொறாமை பிடித்த சிலரோ வயிற்று ஏரிச்சலில்
'நக்குஷா' என்று கேலியும் கிண்டலும் செய்கிறார்.
அவர்கள் நாக்கில் சூடு வைத்தால் கூட
என் கோபம் தீராது மன்னிக்கிறேன் அவரை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Naksha = Map. Feminine name. Indian origin