மனதளவில் நான் விதவை -சகி
நிஜம்
எத்தனையோ வலிகளை
கடந்து வந்தேன்....
காதல் என்ற பெயரில்
உன் துரோகத்தால்
தீயில் விழுந்து
கருகிய மலரானேன்....
சொந்தங்களை
மறந்து உன் உறவை
திருமண பந்தத்தில்
கைபிடித்தேன்....
உன் காதலும்
பொய்...
உன்னுடன் நான்
வாழ்ந்த இல்லற
வாழ்க்கையும் பொய்...
உன் கள்ள தொடர்பால்
உடைந்து சிதறி
விட்டது...
எல்லா உறவாகவும்
நீயாக இருப்பாய்
என்று எண்ணினேன்...
காதல் என்ற பெயரில்
உயிருடன் எனக்கு
கல்லறை எழுப்புவாய்
என்று எண்ணவில்லை...
உனக்காக துடித்த
என் இதயம் உன்னை
உன் காதலை முழுவதுமாக
எரித்து விட்டேன்....
நீ இல்லாமல்
என்னால் வாழ
முடியும்என்ற
தன்னம்பிக்கை உண்டு....
என்மீது உண்மையான
காதல் இருந்திருந்தால்
கள்ள காதல் உனக்கு
முக்கியமாக இருந்திருக்காது...
இனி என்
வாழ்வில் எண்ணங்களில்
என்னில் என்றுமே நீ இல்லை...
உன் துரோகத்தேன்றே
நீ இறந்து விட்டாய்...
மனதளவில் நான்
ஒரு விதவை....
நானும் என்
வாழ்க்கைப்பாதையும்
இனி அனாதை தான்...