நீ என்னைவிட்டு பிரியவில்லையடி 555

***நீ என்னைவிட்டு பிரியவில்லையடி 555 **


ப்ரியமானவளே...


உன்னை தேடி தேடி வந்தேன்
நீ விலகி விலகி சென்றபோதும்...

தொல்லை செய்யாதே என்று
பலமுறை
நீ சொல்லியும்...

உனக்காக
உன்னை தொடர்ந்தேன்...

என் தொல்லைகளே நம் பிரிவுக்கு
காரணமாகும் என்று நினைக்கவில்லை...

நான் இல்லாத
போதுதான் நீ உணர்வாய்...

நான் செய்த
தொல்லைகளிலும்
பாசம் இருந்தது என்று...

என்
இதயம் கல்லறை அல்ல...

உன்
நினைவுகளை
புதைத்து வைத்திருக்க...

மண்ணாக இருந்த என் இதயத்தில்
காதல் விதை போட்டது நீ...

அருகில் நீ
இல்லை என்றாலும்...

அது நாள் தோறும்
வளர்ந்து கொண்டே இருக்கும்...

உன் நினைவுகளும் நான்
உன்மேல் கொண்ட காதலும்...

உன்னை நினைவால்
நெருங்கும் எனக்கு...

நீ என்னைவிட்டு
பிரியவில்லையடி...

உடலெங்கும் ஓடும்
செங்குருதியில் கலந்துவிட்டாய் நீ...

என் வாழ்வு
நிலைத்திருக்கும்வரை...

நீதான்
என்
வாழ்வு.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (27-Jul-22, 9:01 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 342

மேலே