சிந்தையின் சிந்தனை

நேரிசை வெண்பாககள்

எண்ணத்தை சொல்லவேண்டி தேடிப் பதிக்கின்றார்
கண்கவர் பெண்ணோவி யம்பலதை --- கண்ணுதல்
சற்றுமின்றி யாப்பிலா பாட்டை உரைநடையில்
பொற்பெ னலாகா துசொல்

கண்ணுதல். ==== கருதுதல்

தப்பா புனையும் கவிதை யெதுவும்தான்
செப்புக்கா சுக்குதவா செய்யுளாம் -- அப்பா
சிறிதுநேரம் சிந்தையின் சிந்தனைக்கு விட்டு
பறிப்பாய் கனியமுது பாட்டு

.........

எழுதியவர் : பழனி ராஜன் (28-Jul-22, 8:06 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே