பவளவிழா பாரதத்தில் பார் - வெண்பா எழுதுங்களேன்
இத்தளத்தில் ஆர்வமுடன் எழுதும் கவிஞர்கள்,
பவளவிழா பாரதத்தில் பார்!
என்ற ஈற்றடியை வைத்து, தகுந்த பொழிப்பு மோனையுடன், ஒரு நேரிசை வெண்பா (அளவடி) எழுதுங்களேன்.
உதாரணமாக என் வெண்பா;
நேரிசை வெண்பா
சுதந்திரத்தைப் பெற்றேம்யாம் சொர்க்கம்,நம் நாட்டில்
பதவிசுடன் இன்புடனே பாரோர் - இதமாய்
அவத்தையின்றி வாழ்கின்றார் ஆசையுடன் நாளும்
பவளவிழா பாரதத்தில் பார்!
- வ.க.கன்னியப்பன்