கனவுக் காதல்

கனவுக் காதல்


அவள் என்னைப் பார்த்தாள் !
நான் சுவாசிக்கத் தொடங்கினேன்
அவள் பார்வையில் !

அவள் எனக்கு அரிமுகமனால் !
நான் வாசிக்கத் தொடங்கினேன்
அவள் பெயரை !

அவள் என்னை விரும்புகிறேன் என்றாள் !
நான் வசிக்கத் தொடங்கினேன்
அவள் நினைவில் !

தினமும் பீச் பார்க் ரெஸ்டாரன்ட்
தியேட்டர் என சுற்றித் திரிந்தோம் !
நாட்கள் பல நகர்ந்தன !

திடீரென்று ஒரு நாள் அவள்
என்னிடம் ஒன்று சொன்னால் !
என் வீட்டில் வரன் பார்க்கிறார்கள்

நீ என்னை மறந்துவிடு என்று !
நான் இறக்கத் தொடங்கினேன்
அவள் வார்த்தையில் !

திடுக்கிட்டு விழித்தெழுந்தேன்
கனவுக் காதல் கலைந்தது !
என் ஆயுள் முடிந்தது கனவோடு !

எழுதியவர் : ஆ சுப்ரமணியன் (30-Jul-22, 3:34 pm)
Tanglish : kanavuk kaadhal
பார்வை : 216

மேலே