நினைவுத் துண்டுகள்

நான் செல்லும் வழியெங்கும்
எனக்காக காத்திருக்கின்றன
-- உன் விழிகள் !

நமக்கான மாலை நேரத்தில்
தனித்து விடப்பட்டுள்ளன
-- உன் தேனீர் கோப்பையும், நாற்காலியும் !

இப்போதெல்லாம் வழக்கு மொழியாக
மாறிவிட்டது - மௌனம் !

நடை பயணத் துணையாய்
நீ இருந்த இடத்தில், இப்போது
- என் நிழல் !

சின்னச் சின்ன சண்டைகளில்
பெருகிய நம் காதலில்...

முகவரி தொலைத்த பறவையாக - நான்!
உன் நினைவுகளில் எழுதிக் கிழித்த
காகிதத் துண்டுகள் போல !

எழுதியவர் : Radha (3-Aug-22, 1:16 pm)
பார்வை : 226

மேலே