அற்புதமான காதல் கவிதை
🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺
*கவிதை*
படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்
🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷
பெண்ணே!
பிரம்மன்
உன் பார்வையை
மின்னலில் தான்
உருவாகியிருக்க வேண்டும்... இல்லையெனில்
நீ பார்த்த
முதல் பார்வையிலேயே
என் கண்களை
பறித்திருக்க முடியுமா?
💐💐💐💐💐💐💐💐💐💐💐
'காபிக்குச்
சர்க்கரை போட
மறந்துவிட்டேன்
எப்படிடா குடித்தாய்?' என்று
என் தாய்
என்னிடம் கேட்டாள்....
உன்னை
நினைத்துக்கொண்டு
குடித்ததால்.....
காப்பி இனித்தது என்று
என் தாயிடம்
நான் எப்படி சொல்வேன்?
இனியவளே
இப்போதாவது
நீ நம்புகிறாயா
உன் நினைவுகள்
இனிமையானது என்று
நான் சொல்வதை....?
💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஏய் பெண்ணே!
என்ன அவசரம்
அதற்குள் போகிறாய் ?
இன்னும்
கொஞ்ச நேரம் நில்...
நான்
பாதிதான் படித்திருக்கிறேன்
மீதி இன்னும்
படிக்கவே இல்லை
உன்னில் இருக்கும்
" கவிதைகளை...."
💐💐💐💐💐💐💐💐💐💐💐
எல்லா காதலனும்
காதலிக்கு
கவிதை எழுதிக்
கொடுப்பார்கள்....
நீ மட்டும் தான்
எனக்கு
கவிதை எழுதி
கொடுப்பதில்லை என்று
அடிக்கடி
கோபித்துக் கொள்கிறாய்...
அன்பே !
நீ " பெண்ணாக "
இருந்திருந்தால்
நான்
கவிதை எழுதி
கொடுத்திருப்பேன்....
நீ தான்
" கவிதையாகவே !"
இருக்கிறாயே
நான் என்ன செய்வேன்...?
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌸🌷🌸