உன்னுயிர் நானாக வேண்டும் 555

***உன்னுயிர் நானாக வேண்டும் 555 ***
என் பேரழகே...
பனிக்குடம் சுமந்து நிற்கும்
உன் மேனியை கண்டு...
பனிக்குடம் சுமந்து நிற்கும்
புல்வெளியில் நடக்க மனமில்லை...
உன் பார்வைகள்
என் மனதை நனைக்கிறது...
புல்வெளியும்
பாதம் நனைக்கும் என்று...
மலைகள் நதிகள் எல்லாம்
உன் அழகில் நான் காண்கிறேன்...
கண்ட நிமிடத்தில்
சொக்கி போனேன்...
உன்
மொத்த அழகில்...
உன் இதழ்
தேனை சுவைத்திருப்பேன்...
மலர்களின் தேனை
வண்டுகள் மறந்திருக்கும்...
உன் தேன்
இதழ்களை கண்டிருந்தால்...
தினம் உன்னை ரசிப்பதும், நேசிப்பதும்,
சுவாசிப்பதும்தான் என் வேலை...
நீ ரசிக்க வேண்டாம்
நேசித்துப்பார் ஒருமுறை...
நான் உன்னில்
உலாவருவேன் பலமுறை...
ஒவ்வொரு இரவும் உன்
நினைவுகளோடுதான் கழிகிறது எனக்கு...
பகலெல்லாம்
இரவாக வேண்டும்...
உன்
உயிர் நானாக வேண்டும்.....
***முதல்பூ.பெ.மணி.....***