விவேக் சார் ஒரு விவேகம்
*விவேக் சார்* அவர்களுக்கு ஒரு கவிதை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை அது இன்ற நிறைவேறி இருக்கிறது இது பற்றி *தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன் நண்பர்களே*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*விவேக் ஒரு விவேகம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நகைச்சுவையை
எல்லோரும்
விருந்தாக கொடுத்தார்கள்....
நீ மட்டும் தான்
மருந்தாக கொடுத்தாய்....!!!
எல்லோருக்கும்
அப்துல்கலாம் ஐயாவின்
பேட்டியை
பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது.....
உனக்கு மட்டும் தான்
அவரை பேட்டி
எடுக்கும் வாய்ப்பே !
கிடைத்தது......
நீ அதிர்ஷ்டசாலி
என்பதால் அல்ல
புத்திசாலி என்பதால்.....!
நீ நடித்த
படங்களில் வரும்
நகைச்சுவை
காட்சிகள் எல்லாம்.....
எங்களுக்கு
சிரிப்பை
தூண்டிவிட்டதை விட
சிந்தனையைத் தான்
அதிகம்
தூண்டி விட்டது....!
பலரும்
நகைச்சுவையால்
பேரும் புகழும்
பெற்றவர்கள்.....
உன்னால்தான்
நகைச்சுவையே
பேரும் புகழும் பெற்றது.....!
நீ பேசியே !
கொன்று விடுவாய் என்று
சொல்வார்கள்.....
ஆம் .....!!!
உண்மைதான்
நீ பேசியே !
அறியாமையைக்
கொன்றாய்....
மூடநம்பிக்கைகளைக்
கொன்றாய்....
அநீதிகளைக்
கொன்றாய்.....
பகுத்தறிவற்ற
பழக்கவழக்கங்களைக்
கொன்றாய்.......!
எனது நாட்டில்
ஆயிரம் பேர் உள்ளனர்
உபதேசம் மட்டும் செய்ய.....
ஆனால்
உன்னை போன்றவர்கள்
சிலர் தான் உள்ளனர்......
உபதேசம் செய்வதோடு
மட்டுமல்லாமல்
தேசத்திற்கு
தன்னால் முடிந்ததையும்
செய்ய......!!!
என்.எஸ் கலைவாணர்
உனக்கு முன்னால்
பிறந்ததால்
நீ சின்ன கலைவாணர் என்ற
பட்டத்தை பெற்றாய்....
ஒருவேளை
நீ முன்னாடி
பிறந்திருந்தால்
கலைவாணர்
சின்ன விவேக் என்ற
பட்டத்தபைப் பெற்றிருப்பாரே...?!
நேதாஜி
இறப்பைப் போல
உன் இறப்பும்
மர்மமாகவே அமைந்துவிட்டது...
காலம்
உன்னை
மறந்துவிடக் கூடாது
என்பதற்காகவோ......?
அப்துல்கலாம் ஐயா
மரம் நட்டு
மக்களுக்கு -நல்ல
சுவாசக்காற்றை கொடு என்று
சொன்னார்.....
நீ மரங்கள் நட்டு
சுவாசக்காற்று கொடுப்பதோடு
மட்டுமல்லாமல்.....
ஒருபடி மேலே சென்று
உன் மூச்சுக் காற்றையும்
சேர்த்தே கொடுத்துவிட்டு
அப்துல்கலாம் இருக்கும் சொர்க்கத்திற்குச்
சென்று விட்டாயே......!
உனக்கென்ன
அவர் மீது
அவ்வளவு பாசமா.......?
போய் வா......
ஒருவேளை
உன்னை
இந்த நன்றி கெட்ட
மனிதர்கள் மறந்தாலும்....
நீ நட்ட மரங்கள் என்றும்
மறக்காது
போய்வா........!!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏