மலை ஏலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நாவறட்சி தாகசுரம் நாடாத கற்றிவிடுந்
தீவறட்சி நீர்க்கடுப்பைத் தீர்க்குங்காண் - மூவறட்சி
கூடும் அரோசகத்தைக் கூடாமல் ஓட்டிவிடும்
நாடுமலை ஏலம் நவில்

- பதார்த்த குண சிந்தாமணி

மலையேலம் நாவறட்சி, வறட்சுரம், பித்தசொறி, நீர்ச்சுருக்கு, திரிதோட வறட்சியில் வாந்தி, சுவையின்மை இவற்றை நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Aug-22, 11:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே