காட்டு ஏலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தீராத வாந்தி சிலேஷ்மம் அதிசாரம்
பேரா அருசிபித்தம் பேருங்காண் - சோராமால்
காட்டேல வார்குழலே காரம் பரிமளஞ்சேர்
காட்டேலம் என்றுரைக்குங் கால்

- பதார்த்த குண சிந்தாமணி

உரைப்பும் மணமும் உள்ள காட்டு ஏலம் வாந்தி, கபம், பேதி, உணவில் வெறுப்பு, பித்தம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Aug-22, 11:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே