மூவர்ணக்கொடி பறக்குது
மூவர்ணக்கொடி பறக்குது
மூவர்ணக்கொடி மிகக் கம்பீரமாகப் பறக்குது பார்
மூவேந்தர்ஆண்ட நாட்டுப்பெருமையைக் கூறிக்கொண்டு
சிவப்பு நிறம் நிகரற்ற வீரத்தையும் துணிவையும் கூறிட
வெண்மை நிறம் தூய்மையையும் உண்மையையும் உணர்த்திட
பச்சை நிறம்செழிப்பையும் வளமையையும் வெளிப்படுத்திட
வானத்து நீல நிறம் கொண்ட சக்கரம் நாட்டின் நேர்மையை விளக்கிட
மூத்த தலைவர்களின் ஆட்சியில் பெற்ற முன்னேற்றமதை
வெளிக்கொணரக் காற்றில் படபடவெனப் பறக்குது பார்
காலமெல்லாம் தன்னைத் தாங்கும் இந்திய மண்ணில்
முப்படைத் தளபதிகள் தங்கள் மரியாதையைச் செலுத்திட
எழுபத்து ஐந்து ஆண்டுகள் நம் சுதந்திரத்தை கொண்டாடிட
சுதந்திர நாட்டின் பெறுமை வெளிப்பட மணிக்கொடி
தன்னிறைவோடு பட்டொளிவீசி உயரப் பறக்குது