பெருஞ்சீரகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்
பேனமுறு காசம் பிலீகமிரைப் - பீனவுரை
சே’ர்’க்கின்ற வாதமும்போஞ் சீர்பெரிய சீரகத்தால்
மூக்குநோ யில்லை மொழி

- பதார்த்த குண சிந்தாமணி

இதனையுண்டால் யோனிநோய், வயிற்றுவலி, சுரம், செரியாமை, வயிற்றுப்பிசம், கபம், பீலிகம், சுவாசம், வாதம், தும்மல், நாசி நோய் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-22, 8:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே