மெதுவாய் விரியும் விழியில்வான் நீலம்

இதழ்கள் மூடியபோது செம்பவளப் பேழை
இதழ்கள் விந்தால் முத்துக்கள் சிரிக்கும்
மெதுவாய்விரி யும்விழிகளில் மேற்குவான நீலம்
மெதுவாய்இமை மூடும்போது அந்தியங்கே மயங்கும் !

இதழ்மெல்ல மூடினால் செம்பவளப் பேழை
இதழ்மெல் லவிரிந்தால் முத்துச் சிரிப்பு
மெதுவாய் விரியும் விழியில்வான் நீலம்
அதில்அந்தி வந்துகவி யும் !

இதழ்மெல்ல மூடினால் செம்பவளப் பேழை
இதழ்மெல் லவிரிந்தால் முத்தாம் -- மதுஉன்
மெதுவாய் விரியும் விழியில்வான் நீலம்
அதில்அந்தி வந்துகவி யும் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-22, 6:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே