தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி இது;
நமது தாயின் மணிக்கொடி இது;
தலைவங்கியே வாழ்த்திடுவோம் வாரீர்;
தாயின் மணிக்கொடி இது;
தரணியில் நமது பெருமைதனை பறைசாற்றியே பட்டொளி விட்டு பறக்கட்டும்வாரீர்;
விரிந்து பறக்குது இந்தக் மூவண்ணக் கொடி;
வியந்திட வைத்திடும் இந்தக் கொடி;
விடியலைத் தந்த இந்தக் கொடி;
வீர தீர சாகசத்தை பறை சாற்றிடும் இந்தக் கொடி;
இரத்த வேர்வை சிந்தி அடிமை தனத்தை உடைத்தே வாங்கிய சுதந்தர மண்ணில் சுழண்டே சுகமாய் பறக்குது இன்று இந்தக் கொடி;
இந்தியன் என்ற சொந்தத்தை உறுவாக்குது இந்தக்கொடி;
உச்சிக் கொம்பில் பறக்கும் இந்தக் கொடி;
உத்வேகத்தை ஊட்டியே,
எங்கள் உணர்ச்சிகளை மூட்டும் இந்தக் கொடி;
இந்தியன் நாம் என்றே அஇ)சைத்துக் காட்டுது இந்தக்கொடி;
சுதந்திரக் காற்றில் சுற்றிப் சுகமாய் பறக்குது இந்தக்கொடி;
சுதேசிகள் நாங்கள் விதேசிகள் இல்லை,
என்றே சகோதர சகோதரித்துவத்தை நினைவூட்டுது இந்தக் கொடி;
அன்னை பாரத மாதா கரத்தில் ஏந்திய இந்தக் கொடி;
அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்பதை நினைவூட்டுது இந்தக் கொடி;
நல் மூவர்ணத்தை பூசியே, நம் வீரத்தை ஊற்றடுக்க வைக்கிது இந்தக் கொடி;
எமது தேசியக் கொடியினை ஏந்தியவுடனே எம் மக்களிள் நரம்புகளும்இரத்த நாளங்களும் புடைப்பதைப் பாரீர்;
வேகமாய் பறக்குது இந்தக் கொடி;
வீர சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை மறக்காமல் நினைவூட்டுது இந்தக்கொடி;
பச்சை நிறமது எமது நாட்டின் பசுமை, வளத்தினையும் எமது இந்தியனின் பசுமை வாழ்வினையும் பறைசாற்றும்;
வெள்ளையது இந்தியனின் வெள்ளை மனதை வெளிச்சம் இட்டு காட்டிடும்;
பகைவரே சிறியதாய் எடை போட்டு விடாதீர் நாங்கள் சீறியபண்பாளர்கள்;
ஆனாலும் சிறியதாய் நீவீர் தவறு இழைத்தாழும் சினத்தீயால் எரித்து விடுவோம்;
சிவப்பது எங்கள் வீர மறவர்கள் மறத்தியர்களின் சினத்தை அது காட்டிடும்
நடுவில் பதித்து கிடப்பது தர்மச்சக்கரமாம் அசோக சக்கரம் பாரீர்;
இந்தியம் என்ற மந்திரம் இருக்க
இந்தியன் என்ற உணர்வு துடித்துக் கொண்டிருக்க எந்த பிரிவும் நம்முள் எந்த போட்டி பொறாமையும் இல்லையடா தம்பி;
வந்தே மாதிரம் என்பது எங்கள் மூச்சும் வீர முழக்கமடா;
வந்தனம் செய்வது எங்கள் நாட்டவரின் பண்பும் பழக்கமடா;
வஞ்சிப்பவனை வென்சினம் கொண்டு விரட்டியடிப்பதும் எங்கள் பண்படா;
இறையாமைக்கு இடையூரு வரின் இடிந்து கிடக்கமாட்டோம்;
இடி போல் முழங்கியே பகைவனை அடித்து இடித்து விரட்டிடுவோம்;
மந்திரம் ஒன்று உண்டு தம்பி அதுவே
வந்தே மாதரம் தம்பி.
நம்பியே நீ கேள் தம்பி; எங்களை வாழவைத்ததே
இந்த தாரக மந்திரம் தம்பி;
தந்திரமோ தன்னலம் இல்லை தம்பி
வெந்தே போகினும்;
வந்தே கூறுவோம் வந்தே மாதரம்;
எட்டு திக்கிலும் சுதந்திர நாதத்தை முழக்கிடுவோம்;
அணி அணியாய் திரண்டு வந்திடுவோம்;
அன்னை பாரதத்தாயை வணங்கிடுவோம்;

ஆடுவோம் நாம், பாடுவோம்,
நாம் அடிமைகள் இல்லை என்றே
கூடுவோம் குறையொன்று காணாது கூடி, ஒன்றாய் இந்திய மண்ணில் வாழ்திடுவோம்;
சுதந்திரம் நமக்கே என்றே ஒன்றாய் கூடி கைதட்டி கரணம் கூப்பி பாடிடுவோம்; .
கொல்லுவோம், வெல்லுவோம்,கொள்ளுவோம்
வெறுப்பவர் எவர்வரினும், சொல்லுவோம்
செல்லுவோம், செயல்படுவோம் ஓரினம் என்றே;
செக்கிலே சிக்கண்டு, சங்கிலியில் பிணையுண்டு,
மாட்டைப்போல் இழுத்த சிதம்பரனார்
துன்புற்று வந்த சுதந்திரம்;
கருவை வயிற்றில் சுமந்தே
சிறைவாசகம் சென்ற
அஞ்சலையம்மாளின் ஒத்துழையாமை முழக்கத்தில் பெண்கள் போரிட்டு வந்த சுதந்திரம்;
புலியாய் போர் செய்து இராபர்ட் கிளைப் படையையே புரட்டிப்போட்ட புலித்தேவர் போராடிய சுதந்திர வேட்கையது.
வேலு நாச்சியார் அம்மாவின் வீரவால் சுழற்றி விடுதலை முழக்கம் இட்டு வந்த சுதந்திரமிது;
ஈரேழு ஆண்டுகள்சிறைவாசம் செய்த முத்துராமலிங்க சேதுபதி அய்யாவின்
இறப்பில் பிறந்தது இந்த சுதந்திரம்
கட்ட பொம்மனின் கம்பீர வீரசாகத்தில் வித்தானது இந்த சுதந்திரம்;
திப்பு சுல்தான் மருது சகோதரர்களின் மரணத்தின் மேல் வந்தது இந்த சுதந்திரம்;
தம்பி ஊமத்துரை அவர்களின் தூக்குமேடையேறி பெற்ற சுதந்திரம்;
பல்லாயிரக்கணக்கானோர் பிணயக்கைதியாய்வேல்ஸ் தீவுக்கும்
இலச்சத்தீவிலும் அடைக்கப்பட்டு துன்புருத்தப்பட்டு வாங்கிய சுதந்திரம்;
வேலுர் புரட்சியில் வெட்டியெறியப்பட்ட
சுதந்திர வீரர்களின் குருதியின் மேல் பெற்ற சுதந்திரம்.
பிரிட்டிஷ் கொடியை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இறக்கி
இந்திய தேசியக்கொடியைஏற்றியவர்பாஷ்யம்,
மண்டை உடைந்தாழும் மூவண்ணக் கொடியை
தாங்கி உயிர் நீத்த திருப்பூர் குமரனின்
தியாகத்தில் வந்தது இந்த சுதந்திரம்

ஆங்கிலேயரின் அடிவயிறைக் கலக்கிய
வங்கச் சிங்கம் வந்தே மாதரம் என்றே முழங்கி
இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் கூட்டாளிகளின்
போராட்டத்தில் பிறந்தது இந்த சுதந்திரம்
தொழுநோய் தொத்தியம்
தொடர்ந்து நாட்டிற்காக போராடிய சிவாவின் வீர சாகத்தில் வித்தானது
சுதந்திரம்
திலகர் , தீப்பொறி பாரதியார்; நேரு, ராஜா தந்திரி ராஜாஜி, கர்ம வீரர் காமராசர்,
நானா சாகேப் தாதா நவ்ரோஜி, கோகலே,நேரு, இரும்பு மனிதர் வல்லபாய், எல்லை காந்தி கான் அப்துல் கப்பார் கான்;
காந்தியண்ணலின் காந்தக் கண்பார்வையில் திரண்ட தியாகிகளின்
தியாகத்தில் பிறந்தது இந்த சுதந்திரம்;
டான்டியா தோப் ராணி இலட்சுமிபாய், ஜான்ஸி ராணி, கிட்டூர் சென்னம்மா,குன்வார் சிங், பகத்சிங், லஜ்பத் ராய், மங்கல் பாண்டே, ராஜ்குரு, சுகதேவ், பிபின், சட்டர்ஜி, வங்க சிங்கம் தாகூர்,
என்றே பல நூறு தலைவர்களின்தனியா சுதந்திர தாகத்தில் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் குருதியில் உதித்தது இந்த சுதந்திரம்;
மறக்க வேண்டாம் நாம்,பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் வா வா வா;
உறுதி கொண்ட உண்மை இந்தியனாய் ஒற்றுமையாய் வாழ்ந்திட வாவாவா!!!
தாய் நாடு காத்திட தலை நிமிர்ந்து மூவண்ணக் கொடியை சுமந்தே வா வா;
புதிய பாரதம் படைத்திடுவோம் வா வா;
இந்தியன் என்று இறுமாப்புடன்வா;
இந்தியம் என்பது நமது தேசப்பற்று;
அது நமது இரத்தத்தில் ஓடுது,
திமிராய் வா; திரண்டு வா;
பாரத மணிக்கொடியை தாங்கியே வந்தே மாதிரம் என்று உரைத்தே 75 வது சுதந்திர ஆண்டு தினத்தினை ஒன்றாய் கொண்டாட வா வா;

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (15-Aug-22, 12:53 am)
பார்வை : 2474

மேலே