கருஞ்சீரகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கருஞ்சீ ரகந்தான் கரப்பனொடு புண்ணும்
வருஞ்சிராய்ப் பீநசமும் மாற்றும் - அருந்தினால்
காய்ச்சல் தலைவலியுங் கண்வலியும் போம்உலகில்
வாய்ச்ச மருந்தெனவே வை

- பதார்த்த குண சிந்தாமணி

இச்சீரகம் மண்டைக் கரப்பான், இரணம், பீநசம், உட்சூடு, காய்ச்சல், தலை நோய், கண்ணோய் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-22, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே