அவள் கண்ணின் பார்வை
அவள் பேசாது பேசினாள் கண்ணின்
அசைவினால் அப்பப்பா என்னென்பேன் அதை
பேசும் மொழிகள் கூட இப்படி
நெஞ்சில் பதிந்த எண்ணங்களை வெளிக்
கொண்டு வந்திருக்குமோ தெரியாது இவள்
கண்ணின் அசைவில் அவள் உள்ளத்தில்
சுரக்கும் காதல் பேசியது கானமும் இசைத்து
தில்லானா பாடி என்மனம் நாட
இம்மொழி மௌனத் தமிழ் மொழித்தானோ
அதில் இயலும் இசையும் நாடகமும்
ஒருங்கே இசைந்து காண்கின்றேன் நான்