சுதந்திர இந்திய திருநாடு

சுதந்திர இந்திய திருநாடு
-----------------------------------------

எங்கள் நாடு பாரதம்
எங்கள் நாடு பாரதம்
பரதன் ஆண்ட
புராதன நாடு
புனித நாடு

மண்வளம் நீர்வளம்
இயற்கை எழில் வண்ணம்
எங்கும் நிரம்பிய
மண்ணில் சொர்க்கபூமி
எங்கள் நாடு பாரதம்

கங்கைக் காவேரி
மற்றும் வைகைத் தாமிரவருணி
என புனித ஜீவா நதிகள்
பாயும் புண்ணிய பூமி
எங்கள் பாரதம்

இன்று எங்கள் இந்திய
சுதந்திர திருநாள்
ஆம் ஆங்கில ஏகாதிபத்திய
அடிமைப் பிடியிலிருந்து
சுதந்திரம் மீண்டும்
பெற்ற அந்நாளின்
நினைவு நாள்
இந்த நன்னாளில் நாமெல்லாம்
நமக்கு சுதந்திரம் பெற்று தந்த
வீரர்கள் தியாகிகள் அத்தனைப்
பேரையும் நினைப்போம் அவர்களுக்கு
தலைமீது கைவைத்து வந்தனம் செய்வோம்
நம்மை இன்று சுதந்திர பறவையாய்
வாழ வைக்கும் தெய்வங்கள் அல்லவா இவர்கள்


இதோ நம் முன்னே நம்
சுதந்திர பாரதத்தின்
தேசிய கோடி
ஓங்கி வளர்ந்த கொடியின்
உச்சியிலே ஒய்யாரமாய்ப்
பறக்கின்றது.....பார்த்து
மகிழ்வோம் வணங்குவோம்
'ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய ஜெய பாரதம் எனக் கூறி

நம் தேசியக் கொடியில்
வர்ணங்கள் மூன்று
மேவும் காவி வர்ணம்
நம்மில் பொங்கும் வீரம்
இடையில் வெண்மை
உண்மை தர்மம் அமைதி
என்ற மூன்று நம் வாழ்க்கை
தத்துவம் சனாதன தர்மம்
கீழே கண்ணைப் பறிக்கும்
பச்சை நிறம் நம்
பாரதத்தின் மண்ணின் செழுமை

நம் தேசிய கொடி
நமக்கு பெருமை
நமது அழியா பொக்கிஷம்
இது தாயின் மணிக்கொடி
பாரதத் தாயின் மணிக்கொடி
அன்றே பரத்தி பாடி சென்றான்
இதன் புகழை


நம் தேசிய கொடி
நம் சுதந்திரத்தின் சின்னம்
இது நமக்கு
தாயும் தந்தையும்
தெய்வமும் ஆகும்


வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வாழ்க நம் நாடு
வளர்க இந்தியர்
திசையெல்லாம் பெறுக
நம் திறனின் பெருமை

நாட்டைக் காப்போம்
கொடியைக் காப்போம்
இது நம் பிறப்புரிமை

வாழ்க பாரதம்
வாழ்க வாழ்கவே

--------------------------------------------------------

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-22, 7:38 am)
பார்வை : 453

மேலே