தாயின் மணிக்கொடி

நம் நாட்டு மணிக்கொடியின் வண்ணங்களின்
எண்ணிக்கை மூன்று

இந்த மணிக்கொடியை
பெறுவதற்கு
நம் மூதாதையர்கள்
பட்ட துன்பங்கள்
எண்ணிலடங்காது...!!

நம் நாட்டிற்கு
வியாபாரம் செய்ய வந்த
வெள்ளைக்காரன்
நம்மில் சிலரை விலைக்கு
வாங்கினான்
பிறகு அவர்களை வைத்து எல்லோரையும்
அடிமையாக்கி
கொடுங்கோல் ஆட்சி செய்தான்

வெள்ளையனின்
ஆட்சியை எதிர்த்து
"சுதந்திரம்
எனது பிறப்பு உரிமை" என்று
பாலகங்காதர திலகரின்
கோஷம் காட்டு தீயாக
நாடெங்கும் பரவியது

நாம் சுதந்திரக் காற்றை
சுவாசிக்க உத்தமர்கள்
பலர் தங்களின்
வசந்த காலத்தை
தியாகம் செய்தார்கள்.

நாட்டின் சுதந்திரத்திற்கு
அரும்பாடுப்பட்ட
உத்தமர்களை வணங்கி
நமது நாட்டின்
75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவோம்
பெற்ற சுதந்திரத்தை
பேணிகாப்போம்...!!

தாயின் மணிக்கொடியை
தாழ்ந்து வணங்குவோம்
பாரெங்கும் பட்டொளி வீசிப்
பறந்திட செய்வோம் வாரீர்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Aug-22, 11:08 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 234

மேலே