பிளப்புச் சீரகம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
உடலுக் கழகாம் உறைபித்தம் ஏகும்
அடலுறு வாதம் அதமாம் - கடிசேர்
தளவுநகைக் கோட்டுமுலைத் தையலே நாளும்
பிளவுநறுஞ் சீரகத்தைப் பேண்
- பதார்த்த குண சிந்தாமணி
இச்சீரகத்தால் நீங்காப்பித்தம், வாதம் இவை நீங்கும்; உடல் நல்ல அழகு பெறும்