கொத்துமல்லி - நேரிசை வெண்பா

கொத்துமல்லி
நேரிசை வெண்பா
(‘ர்’ இடையின ஆசு)

கொத்துமல்லி வெப்பங் குளிர்காய்ச்சல் பித்த(ம்)மந்தஞ்
ச’ர்’த்திவிக்கல் தாகமொடு தாதுநஷ்டம் - கத்தியெழும்
வாத விகாரமடர் வன்கர்த் தபிவிரணம்
பூதலத்தில் லாதகற்றும் போற்று

- பதார்த்த குண சிந்தாமணி

கொத்துமல்லியானது உட்சூடு, குளிர்சுரம், பித்தம், பித்த வேகம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, சுக்கிலம், வாதவிகாரம், பெரும் ஏப்பம், கர்த்த விரணம் ஆகியவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Aug-22, 12:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே