அழகின் விளக்கம் அப்துல்கறீம்

நேரிசை வெண்பா

பலநாளாய் வெண்பாவில் பாப்புனைய வேண்ட
விலகிமறைந் தாரோடி வீணில் -- குலத்தமிழர்
வெண்பா இனமொழி வேறாயி னென்கறீம்
கண்ணென பாடினார் காண்



எழுத்துத் தளத்தில் அப்துல் கறீம் என்னும் அன்பர் நேரிசை வெண்பா
என்று ஒரு பாடல் எழுதி யிருக்கின்றார். அவருடைய துணிவை இங்கு
நான் பாராட்டுகிறேன்

வெண்பா வெனின் பொருந்தும் ( நேரிசை வெண்பா ஆகாது
)
நிறையுடை​ மாந்த ரெவருமில் கூனின்
குறைநோக் கிணங்கே தணவே - அறிவீர்
பிறைமதி உட்குறைவும் கொஞ்சும் மழலைக்
குறையுடைச் சொல்லும் அழகு




நேரிசை வெண்பா எனின் அடிதோறும் எதுகை வரப் போதாது அடி தோறும்
மூன்றாம் சிரில் மோனைகளும் வரவேண்டும்

மேலும் தனிச் சொல்லும் ( அறைவீர் ) றை எதுகை கொண்டிருப்பின் நல்லது

நான்காவது வரி குறையுடைச் சொல்லழகாம் கூறு என்றிட சரியாம்

எழுதியவர் : பழனி ராஜன் (17-Aug-22, 3:24 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே