நினைவில்லாமல் வாழ்வது எப்படி 555

***நினைவில்லாமல் வாழ்வது எப்படி 555 ***
என்னுயிரே...
நீயும் நானும் சேர்ந்திருந்த
நாட்களில் எல்லாம் பகிர்ந்தேன்...
உன்னிடம் கடந்த
காலத்தையும் நிகழ்காலத்தையும்...
நீ பிரிந்து சென்றதை
நான் யாரிடம் சொல்ல...
என்னை மறக்க நினைக்கும்
உன் இதயத்திடம் கேட்டு பார்...
என் நினைவு இல்லாமல்
முழுவதும் மறந்துவிட்டாயா என்று...
உணர்வற்ற என் இதயம்
உன் நினைவால் மட்டுமே வாழுதடி...
மேகங்கள் மோதிக்கொண்டதில்
மின்னல் உருவானது...
நீயும் நானும் முறைத்து
கொண்டதில் காதல் உருவானது...
நீ மறந்துவிட்டாயோ
நம் முதல் சந்திப்பு...
நம்
இடைவெளிகள் குறையவே...
என் எழுத்துக்கள்
நிரம்புகிறது காகிதத்தில்...
உன் நினைவுகள்
இன்றி நான் வாழ்வது எப்படி...
என் நினைவுகள் இன்றி
நீ மட்டும் எப்படி வாழ்கிறாய்...
புல்லின் நுனியில்
இருக்கும் பனித்துளி நான்...
எந்நேரமும்
மண்ணில் விழுவேன் கண்மணி.....
***முதல்பூ.பெ.மணி.....***