என் இதயத்தில் உன் நினைவுகள் 555

***என் இதயத்தில் உன் நினைவுகள் 555 ***
உயிரானவளே...
நாம் சேர்ந்திருந்த
அழகிய நாட்களில்...
என் கரம்
கோர்த்து சொன்னாய்...
மீண்டும் தாயின் கருவறை
கிடைத்தால் எப்படி இருக்குமென்று...
என் இதய கருவறையில்
உன்னை சுமக்கிறேன்...
உனக்கு
சுகமில்லையா என்றேன்...
நெஞ்சில் சாய்ந்தபடி
காலமெல்லாம் வேண்டும்...
இந்த
இன்பம் என்றாய்...
வளர்ந்த பிள்ளைகள்
தாய் தந்தையை...
தனிமையில்
தவிக்க விடுவது போல...
நீ என்னை தனிமையில்
தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்...
உன்னை
சுமந்த என் இதயம்...
நொடிகூட மறக்காமல்
உன் நினைவிலே துடிக்கிறது...
ஆயிரம் காயங்களுக்கு
ஆறுதலாய் வந்தது உன் காதல்...
நீ
கொடுத்த வலியை மறக்க...
எத்தனை காயங்கள் வந்தாலும்
உன் வலி மட்டும் மாறாதடி...
உளிகள் இல்லாமல் நீ
செதுக்கிய கல்வெட்டுதான்...
என்
இதயத்தில் உன் நினைவுகள்.....
***முதல்பூ.பெ.மணி.....***