நீ யாருக்காக சிந்துகிறாய் கண்ணீர் 555

***நீ யாருக்காக சிந்துகிறாய் கண்ணீர் 555 ***


சகியே...


எப்போதும் சிரிக்கும் உன் விழிகள்
இன்று சோர்ந்திருப்பதென்னடி...

மை பூசிய உன் விழிகள்
மெல்ல கரை
வது ஏனடி...

எப்போதும் என் காதில் கேட்கும்
இனிய சொல் உன் குரல்தானடி...

நீ என்னுடன்
இல்லாமல் போனால்...

நானும் என்
கவிதைகளும் அனாதைதானடி...

இனியும் உனக்கு
கண்ணீரின் சுமை
வேண்டாம்...

நீ யாருக்காக
சிந்துகிறாய் கண்ணீர்...

பூக்கள் எங்கு
வேண்டுமானாலும்
பூக்கும்...

புன்னகை உன் இதழ்களில்
மட்டுமே இருக்க வேண்டுமடி...

சகியே எனக்குள் கலந்துவிட்ட
உன் விழிகள் கலங்கினாள்...

நான் மண்ணில் வாழும்
நிஜம் பொய்யாகிவிடுமடி...

நீ காதலை
சொன்ன போதுதான்...

என் வாழ்க்கையே
தொடங்கியது அந்த நிமிடத்தில்...

இனியும்
கலங்காதே என் சகியே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (19-Aug-22, 4:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 245

மேலே