அற்புதமான காதல் கவிதை
💙❣️💙❣️💙❣️💙❣️💙❣️💙
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💙❣️💙❣️💙❣️💙❣️💙❣️💙
இனியவளே !
உன் பெயரை
உச்சரிக்கையில்
உயிரில் பூ பூக்கிறதே !
உன் புகைப்படத்தைப்
பார்க்கையிலே
உள்ளத்தில்
பூங்காற்று வீசுகிறதே !
உன்னை காண
வருகையில்
வசந்த வாசல் திறக்கிறதே!
உன்னைக்
கண்டு விட்டால்
என் மேல் மட்டும்
வான்மழை பொழிகிறதே!
நீ தொட்ட
பொருளெல்லாம்
என் வீட்டில்
பொக்கிஷமாகிறதே !
உன்னோடு
இருப்பதெல்லாம்
எனக்கு
உலக அதிசயமாகிறதே!
பணத்துக்காக
ஏங்கிய என் மனம்
உன் பாசத்துக்காக
ஏங்குகிறதே !
எனக்காக
துடித்த என் இதயம்
இப்போது
உனக்காக துடிக்கிறதே !
மனம் விட்டு
நீ சிரிக்கையில்
என் மனம்
என்னை விட்டு
பறக்கிறதே....!
என்னருகில்
நீ நிற்கையிலே
கோடையிலும்
குளிர் அடிக்கிறதே.....!
என்னில்
எத்தனை மாற்றம்
அத்தனையும்
நீ தந்த மாற்றம்....!
*கவிதை ரசிகன் குமரேசன்*
💙❣️💙❣️💙❣️💙❣️💙❣️💙