கவிஞர் தின வாழ்த்து கவிதை

#கவிஞர்_தின த்திற்கு ஒரு கவிதை எழுதுகியிருக்கிறேன் படித்து மகிழுங்கள்.. *வாழ்த்துங்கள் வளர்கிறேன்*

படைப்பு #கவிதை_ரசிகன்
குமரேசன்

கவிஞன்.....
சமுதாய களத்தில்
கவிதை அஸ்திரத்தால்
அநீதியோடு போராடும்
போர் வீரன்.....!!

கற்பனை
சிறகு விரித்து
கவிதை வானில்
பறந்து மகிழும்
மனிதப்பறவை.....!!

கவிஞன் கையில்
எழுதுகோல் இருக்கிறது...
ஆசிரியர்
கையில் இருக்கும்
கோலாகவும்.....
அசோகர்
கையில் இருந்த
வாளாகவும்.....!!

இவனது
எழுதுகோலில் முனையில்...
சிலநேரம்
பூ மொட்டுகள் வெடித்தாலும்....
பல நேரங்களில்
பூகம்பத்தையே ஏற்படுத்தும்
எரிமலையும் வெடிக்கும்.....!!

காகித வயலை
எழுதுகோல் ஏரால் உழுது
மைநீர் பாய்த்து
எழுத்து நாற்று நட்டு
கவிதைப்பயிர் செய்து
கருத்துத்தானியங்களை
அறுவடைச் செய்யும்
இவனும்
ஒரு விவசாயி தான்.... !!!

அழுக்கேறிக் கிடக்கும்
மனங்களை
இவன்தான்
சலவை செய்கிறான்.....!!

மழுங்கிக் கிடக்கும்
மனித மூளைகளை
இவன்தான்
கூர் பிடிக்கிறான்....!!

காகிதப்பட்டறையில்
எழுதுகோல் தறியில்
எழுத்து நூல்களால்
காவியப்பட்டு
நெய்து தருவதால்
இவனும்
இன்னொரு நெசவாளிதான்.!!

சில சமயம்
சிலுவைச் சுமப்பான்....
சில சமயம்
அக்னி குண்டமிறங்குவான்...
சில சமயம்
பலியிட ஒட்டகமாவான்....

ஆதலால் ....
இவன்
சாதி
மதங்களை கடந்தவன்....!!

முகமூடி
அணிந்துத் திரியும்
மனித மிருகங்களை
இவன் தான்
அடையாளம் காட்டுகிறான்....

இவன் மனம்
மலரினும் மென்மையானது...
இருப்பினும்
மலையினும் வலிமையானது...

பௌர்ணமியை மட்டுமல்ல
அமவாசையையும்
ரசிப்பவன்...
பட்டாம்பூச்சியை மட்டுமல்ல
புழுவையும் நேசிப்பவன்....!!

வார்த்தைகளால்
வாசகர் மனதை
வசியம் செய்பவன்....!!
கருத்துக்களால்
வாசகர் இதயத்தை
களவாடிக் கொள்பவன்.....!!

காதல் காயம் பட்ட
மனங்களுக்கு
மருந்தாகவும்......
காதல் ஏற்பட்ட மனங்களுக்கு
விருந்தாகவும் இருப்பான்..!!

வாடிக்கிடக்கும்
மனங்களின் வேர்களில்
கவிதை நீர் பாய்த்து
புத்துணர்ச்சி
கொள்ள செய்வான்....!!

தோற்றுக் கிடக்கும்
மனங்களுக்கு
கவிதை உரமிட்டு
ஊக்கப்படுத்துவான்....!!

பிளப்பதால்
இவனை அழிக்க முடியாது
ஏனெனில் ?
இவன் ஒரு அணு....!!

காலன் என்ன ?
காலத்தாலும்
இவனை
சாகடிக்க முடியாது...
நெருப்பாலும்
எரிக்க முடியாது...
மண்ணாலும்
ஜீரணிக்க முடியாது
வெள்ளத்தாலும்
அடித்துச்செல்ல முடியாது..!!
ஏனென்றால் ?
இவன் மண்ணில் வாழும்
பிரம்மா .....!!!

,💐 *கவிஞர்களுக்கு கவிஞர் தின நல்வாழ்த்துகள்* 💐

இவன்

🌺 *கவிதை ரசிகன் குமரேசன்* 🌺

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-Aug-22, 3:35 pm)
பார்வை : 33

மேலே