அந்த மகமாரி

என்னிடம் நீ இல்லை
என்பதைத் தவிர
வேறு அவப்பெயர் ஒன்றும்
விட்டுச் செல்லவில்லையடா
மகனே நீ எனக்கு.
ஐம்பது பேர்
மத்தியிலும் மகனே
உன் பெயர் சொல்லி
தலை நிமிர்ந்து நடப்பேன் நானடா.
ஐந்து பேர் முன்நிலையிலும்
அச்சம் கொண்டு
அவமான சிக்கலில் சிக்குண்டு
தலை குனிந்து நடப்பாள்
நீ கொண்டு
வந்தவளைப் பெற்றவளடா.
என் வார்த்தை
வேலி கட்டி விட்டதோ
இல்லை நீ உமக்கு
வேலியிட்டாயோ
தடம்புரளாத
வாழ்க்கை வாழ்ந்து காட்டியே
தடயம் அழித்து
போய் விட்டாயடா.
குடிகாரன் பெத்த பிள்ளை
குடிகாரன் ஆவன்
என்னும் சொல்லை
முறியடித்து
என் ஆசை போல்
போதை என்னும்
பாதை போகாது
என் செல்லமே
நீ வாழ்ந்தாயடா.
நினைக்கையிலே
உன்னை ஈன்ற பாக்கியம்
அடைந்தேன் நானடா.
உன் இளகிய மனமும்
ஏமாளிக் குணமும்
தொட்டதெல்லாம் தங்கமென
நம்பிடும் எண்ணமும் தானடா
உன்னை எங்களது
குடும்பத்திலே
தங்கிட தடையாய்
மண் மறைத்து விட்டதடா
பொன் போல் காத்தாய்
பொண்டாட்டி எனப் பார்த்தாய்
கண்ணைக் கட்டி கருமாரி
செய்ய வைத்து விட்டாளேடா
உருமாரி தட்டிப்பாள் நிச்சயம்
பாதகக்தியை அந்த மகமாரி தாயடா