இடையார்க்குலம்
நான்முகன் பிறப்பின் தெய்வம் முக்கண்ணனோ அழித்தலுக்கு
என்று இவர்கள் இடையில் நாராயணன் காக்கும் தெய்வம்
நாராயணன்தான் ராக்கதரை அழித்து நல்லோரை
வாழ்விக்க அன்று வடமதுரையில் ஆய்க்குலத்தில்
நந்தகோபன் யசோதைக்கு குமரனாய் வந்து
வளர்ந்தான்' இடையன்' திருமாலாய் அதனால்
ஆய்க்குலத்தார்' இடையர்கள்' என்ற குலப்பெயரால்
சிறந்தார்கள் ஆக 'இடையர்' என்றால்
திருமால் குலத்தார் என்று அறிந்துடுவீர் மற்றும்
கண்ணன்மேல் இடையர்கள் வைத்த அன்பு
தூய அன்பு எல்லையில்லாதது அதனால்
இந்திராதி தேவர்களுக்கு கிட்டா கண்ணன்
கருணைப் பெற்றவர்கள் யாதவர்கள் இடையர்கள்