நம்மை மிஞ்ச யாரும் இல்லை
பொருளில்லா பெயர்களை
பிள்ளைகளுக்குச்
சூட்டுவதில் ஆங்கிலேயருக்கும்
இந்தி மொழி பேசுவோருக்கும்
கடுமையான போட்டி!
இந்திக்காரர்களைப் பார்த்து
செம்மொழியாம் தமிழைப்
பேசும் நமக்கும் தொற்றியது
அவ்வகைப் போட்டி!
மரம் என்றும் கொடி என்றும்
இந்திப் பெயர்கள்
பியா இன்னும்
தமிழுக்கு வரவில்லை
லதா வந்து ஐம்பதாண்டு
ஆகியிருக்கும்.
இப்போது தமிழரைப்
பிடித்து ஆட்டுவது
அர்த்தமில்லா பெயர்களை
உருவாக்கி பிள்ளைகளுக்குச்
சூட்டுவதே.
கார்த்திகையில் பிறந்தால்
கிருத்தியா, கிரித்தியா
இன்னும் எத்தனையோ
பல பெற்றோர்கள்
உருவாக்கிய பெயர்கள்.
பூவிஷா, நிவிஷ், பூவிஷ்
இன்னும் சில சான்றுகள்
ஆங்கிலம் பேசுவோரையும்
இந்தி பேசுவோரையும்
மிஞ்சி விருகிறோம் நாம்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Piya = Tree.
Lata = Creeper