பொய் பேசேல்
பொய்யுரை தவிர்..
⚘⚘⚘⚘⚘⚘⚘
உள்ளதை உள்ளதாய்
உரைத்தலே சிறப்பு
கள்ளமாய்ப் பிறந்திடும்
கயமையோ வெறுப்பு
கற்றநல் மாந்தரின்
கண்ணியப் பெருமையே
வெற்றியே கிடைக்கினும் வேண்டிடார் பொய்மையே
மன்றிலே பொய்யுரை மறுத்து
ஒன்றியே ஒழுங்கினில்
ஒழுகுதல் பீடே !
-யாதுமறியான்.