வா என்றது வயது
வா என்றது வயது ;
தா என்றது தனிமை
போ என்றது பொழுதும்;
பழகு என்றது பருவம்;
படி என்றது பார்வை;
பிடி என்றது கரமும்;
வடி என்றது அழகும்;
துடி என்றது வலியும்;
மடி என்றது வாழ்கை.
ஆ என்றது உதடு;
இ என்று இழித்தது மனமும்;
சீ என்றது வெட்கம்;
வை என்றது கை;
பாழ் என்றது உறவும்;
பழகு என்றது உயிரும்;
வாழ் என்றது வயதும்;
வீழ் என்றது விழியும்;
மீழ் என்றது மனமும்;
மிதந்திடு என்றது மோகம்;
மாண்டிடு என்றது விரசம்;
மயக்கிடு என்றது உள்ளம்;
மயங்கிடு என்றது ஆசை;
சென்றிடு என்றது ஏக்கம்;
வென்றிடு என்றது தயக்கம்;
விரைந்திடு என்றது வியப்பும்;
விழுந்திடு என்றது இரவும்;
துள்ளிடு என்றது துடிப்பு;
தள்ளிடு என்றது தாகம்;
தயங்கிடு என்றது கோபம்;
தவித்திடு என்றது தயக்கம்;
தடுமாறு என்றது தவிப்பு;
தவழ்ந்திடு என்றது வனப்பும்;
தங்கிடு என்றது தேகம்;
மிரண்டிடு என்றது உடலும்;
உருண்டிடு என்றது உறவும்;
வென்றிடு என்றது ஆண்மை;
விலகிடு என்று விழுந்தது பெண்மை;
களவாடு என்றது கண்கள்;
உறவாடு என்றது உயிரும்
கரைந்திடு என்றது ஏக்கம்;
அள்ளிடு என்றது ஆசை;
சொல்லிடு என்றது தயக்கம்;
சுவைத்திடு என்றது மோகம்;
சுமந்திடு என்றது உணர்வும்;
(கொண்டிடு)கொன்றிடு என்றது வெட்கம்;
உண்டிடு என்றது உறவும்;
விழுந்திடு என்றது கால்கள்
உறங்கிடு என்றது நினைப்பும்;
உயிர்த்திடு என்றது இதயம்;
அணைத்திடு என்றது வேட்கை;
அணைந்திடு என்றது தீபம்;
குனிந்திடு என்றது நாணம்;
ருசித்திடு என்றது உடலும் ;
வென்றிடு என்றது பருவம்
வெந்திடு என்றது வேட்கை;
ரசித்திடு என்றது சிரிப்பும்;
சினந்திடு என்றது சிணுங்கள்;
சிதைந்திடு என்றது சிற்றின்பம்;
சிறையாகிவிடு என்றது சீற்றம்;
சுவைத்திடு என்றது ஆசை;
வாழ்ந்திடு என்றது நினைவும்;
வர மாட்டேன் என்றது வெட்கம்;
அட டா என்றது வயது;
அடம்பிடி என்றது சிணுங்கள்
வுந்தே கவித்தியது பரிசம்
விடு என்றது கோபம்;
விடமாட்டேன் என்றது தவிப்பு;
விடை கொடு என்றது பொழுதும்;
கேள் கேள் என்றது காதல்;
சொல் என்றது விழியும்;
செல் செல் என்றது கால்கள்;
விடு விடு என்றது விரக்தி;
தொடு தொடு என்றது கரங்கள்;
அட வா என்றது நகைப்பு;
வருவாயா என்றது தவிப்பு;
துணிவாயா என்றது துவக்கம்;
நனைத்திடு என்றது வெட்கம்;
நடுங்கிடு என்றது சொர்க்கம்;
ஏதோ ஒரு மயக்கம்;
ஏங்கியே வந்தது தவிப்பு;
ஏந்தியே வந்தது தயக்கம்;
எங்கிருந்தோ வந்த துணிவும்;
ஏனோ இந்த இம்சை;
மூட்டியது இதயத்தில் ஆசை.