சகனே சகனே

உன் கரம்பற்றி நடந்த மழைக்காலங்களில்
பாதைகள் நீண்டிட மனம் வேண்டியது
பட்டும் படாமல் ஒரு குடைக்குள் தேகம்
ஒடுங்கி உரசிட துடித்தது

உன் மார்பில் சாய்ந்து அழுதபோது
சோகங்கள் கூட சுகமாய் கழிந்தது
உன் மடி சாய்ந்து இமை மூடுகையில்
மரணத்தையும் மனம் தழுவிட துணிந்தது

என் நினைவுகளின் குத்தகைக்காரனே. .
அறிந்தும் அறியாதது போல்
அடர் மௌனத்தில்
ஏன் என்னை மூழ்கடிக்கிறாய்....?
அக்கினி நாவின் நுனித் தீண்டலில் நாளும்
ஆவிப் புண்ணாகி உதிரம் கசிகிறது

சகனே சகனே...
கரிசனப் பார்வையிலேனும்
தரிசனம் தந்திடு
விரிசலிட்ட இதயத்தை உன்
ஸ்பரிசத்தால் உயிர்த்திடு!

எழுதியவர் : வை. அமுதா (26-Aug-22, 5:56 am)
Tanglish : skane skane
பார்வை : 82

மேலே