மனைவியாவாட்குரிய நற்குணங்கள் - அறநெறிச்சாரம் 159

நேரிசை வெண்பா

கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை - விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போ டுணர்வுடையாள் பெண். 159

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

கணவன் குறிப்பறிந்து செயல்களைச் செய்தல், மகளிர்க்குக் கூறிய நாணினையுடைமை,

எப்பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமை,

கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமை ஆகியவற்றை

விரும்பி மேற்கொள்ளுதலோடு தன் விருப்பு வெறுப்புகளை அகற்றி உடலழகும், அறிவும் உடையவளே பெண்ணாவாள்.

குறிப்பு:

கொண்டான் - மனையின் வாழ்க்கைப் பொறுப்பை மேற்கொண்டவன் (கணவன்)

வெஃகாமை

1. Absence of desire; அவாவின்மை.
2 Absence of cupidity or covetousness; பிறர் பொருளை வௌவக் கருதாமை. (குறள், அதி. 18, தலைப்பு.)
3. Dislike, disgust; வெறுப்பு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Aug-22, 11:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே