உன் மார்போடு என்னை அனைத்துகொள்ளடி 555
***உன் மார்போடு என்னை அனைத்துகொள்ளடி 555 ***
என்னுயிரே...
முதல்முறை உன்னை
நான் பார்த்த போதும்...
நீ என்னிடம் காதலை
சொன்ன போதும்...
எனக்குள்
இருந்த சந்தோசம்...
என்றும் என்னுள்
மறையாத நினைவுகள்...
உன்னிடம் என்றும்
நான் முத்தம் கேட்டதில்லை...
நீ என்னருகில்
இருக்கும் போது...
நீயாக இதழ்
பதிப்பாய் என்னை அறிந்து...
என் முழு அன்புக்கும்
நீதான் சொந்தக்காரி...
என்னிடம் இருப்பது காற்று
சென்றுவரும்...
உடல்
கூடு மட்டும்தான்...
நீ கேட்டால் தருவேன்
முழுமனதோடு உனக்கு உயிரை...
உன்
முத்தத்தின் சப்தத்தில்...
என் உயிர்
பிரியவேண்டுமடி...
என் விழியில்
வரும் கடைசி துளியை...
உன் விழியில்
நான் காணும் போது...
என்
உயிர் பிரியவேண்டுமடி...
இந்த நிமிடமே
என் உயிர் பிரிந்தாலும்...
உன் மார்போடு என்னை
அனைத்துகொள்ளடி...
எனக்காக துடிக்கும்
உன் இதயத்தின் ஓசையை...
மெல்லிசையாக கேட்டு
கண்மூடுகிறேன் என்னுயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***