கெடும் கெடும் கெடும் – மெய்யும் மெய்பாடும் 210

கெடும் கெடும்

1. கேடு நினைப் பின் கெடும்
2. கேள்வி கேட்காத ஆட்சி கெடும்
3. கேளாமை கயமையால் கெடும்
4. கேளாதார் வாழ்வு கேட்காமலேயே கேடால் கெடும் ;
5. கெட்டவர் தொடர்பு உன்னை கெடுக்கும்
6. கெடுதல் செய்தால் உன் நிலை கெடும்
7. கொடுக்கள் வாங்களில் உறவு கெடும்
8. கொட்டாத மழையால் உலகே கெடும்
9. சொட்டாத கருணையால் அன்பு கெடும்
10. சீற்றத்தால் உறவு கெடும்
11. சினத்தால் நெறி கெடும்
12. பணத்தால் மனம் கெடும்
13. நயமில்லா சொல்லும் கெடும்
14. பதவியால் நிம்மதி கெடும்
15. பயத்தால் அமைதிகெடும்
16. பாசத்தால் பிள்ளை கெடும்
17. பாவத்தால் அறம் கெடும்
18. பகையால் நட்பு கெடும்
19. பகுத்தறிவு இன்றி உன் மூளை கெடும்;
20. பார்க்காத பயிறும் கெடும்;
21. பண்பாடு இன்றி வாழ்வு கெடும்;
22. பயன்பாடு இன்றி பொருள் கெடும்;
23. கேளாத குழந்தையும் கெடும்;
24. கேள்வி ஞானம் இன்றி கல்வியே கெடும்;
25. தேடித் தேடி ஓடி குவிக்கும் செல்வத்தால் நிம்மதி கெடும்
26. தேய்ந்துபோன சக்கரத்தால் வாகனமே கெடும்
27. தீண்டாமையால் மனித இனமே கெடும்
28. பொய்மையால் வாய்மை கெடும்
29. மெய் பொய்யானால் உண்மை கெடும்
30. தீமையால் தன்மானம் கெடும்
31. செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்
32. செயற்பால செயலை செய்யின் அச்செயலே அவரை கெடுக்கும்
33. தீது செயின் தீராப் பகை வந்தே கெடும்;
34. தீய்ந்து போன உணவால் சுவைகெடும்
35. தீமையால் தன்மானம் கெடும்
36. ஓடாத நதியால் வேளாண்மை கெடும்
37. ஓதாத கல்வியும் கெடும்
38. ஓய்ந்து போன வயதில் மதிப்பும் கெடும்
39. ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்
40. ஒவ்வாத செயலால் உன் பெயர்கெடும்
41. ஓயாமல் ஒப்பாரி வைப்பவனும் கெடுவான்
42. சேராத உறவும் கெடும்
43. சேரத்தகாத சேர்கையால் குலமே முந்தக் கெடும்
44. லயமில்லா சுரத்தால் பாடல் கெடும்
45. லாபம் இல்லா தொழிலால் முதலீடும் முன்னேற்றமும் கெடும்
46. ஆதாயம் தேடும் உறவும் ஆகாமல் கெடும்
47. நயமில்லா சொல்லால் நட்பும் உறவும் கெடும்
48. சோம்பினால் வெற்றி கெடும்
49. சுனங்கினால் வளர்ச்சி கெடும்
50. சோகத்தால் வாழ்வே கெடும்
51. சொந்தத்தால் நிம்மதி கெடும்
52. சொத்தால் பெற்றோர் பிள்ளைகள் உறவே கெடும்
53. சுயமில்லாமல் உன் துவக்கம் கெடும்
54. சுமையில்லா வாழ்க்கை சுகத்தால் கெடும்
55. சுகம் இல்லாத உடல் நோவால் கெடும்
56. சந்தோசம் சந்தேகத்தால் கெடும்
57. நம்பாமை வீம்பாய் வம்பாய் வந்தே கெடும்
58. பற்றில்லாத பற்று ஒட்டு உறவு இல்லாமல் கெடும்
59. பண்பில்லாத குணம் இரக்கத்தனம் இல்லாமல் அரக்கக் குணத்தால் கெடும்
60. நம்பிக்கை இல்லை என்றால் முயற்சி கெடும்
61. மோதினால் சுகம் கெடும்
62. மோகத்தால் இளமை கெடும்
63. எதுகை மோனை இல்லாமல் புலமை கெடும்
64. முறையற்ற உறவால் வாழ்வே கெடும்
65. முறையற்ற செயலால் நன்மையே கெடும்
66. முயற்சி இல்லா துவக்கம் முழுவதும் கெடும்
67. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்: கெடுப்பா ரிலானுங் கெடும்”
68. 'பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடும்
69. 'பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடும்
70. வேகம் இல்லை என்றால் விவேகம் கெடும்
71. கடுகு இல்லாமல் மணம் கெடும்
72. கடன் பட்ட மனிதன் வாழ்கையே கெடும்
73. கடன்காரனால் மானம் கெடும்
74. ஒற்றுமையில்லா குடி கெடும்
75. ஒருமைப்பாடு இல்லாத தேசம் கெடும்
76. ஒன்றாய் செயல் படாமல் தொழில் கெடும்
77. பாலின் தன்மையும் பாத்திரத்தினால் கெடும்
78. பாவிகளின் தன்மையும் அவனின் பழக் வழக்கத்தினால் கெடும்;
79. கண்ணியம் தவறினால் கண்டனவும் காணாக் கெடும்
80. மன்னியம் தவறின் வாழ்வியலே கெடும்
81. புண்ணியம் தவறின் மறு பிறப்பே கெடும்
82. நல்லாள்/ன் உடன்படின் நாடே கெடும்
83. நல்லது கெட்டது தெரியாமல் வாழ்வே கெடும்;
84. உட்பமை உள்ளிருந்து உறவாடி கெடுக்கும்
85. நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்
86. கொடுப்பதை பகையென்று கருகின் உடுப்பதும் உண்பதுவும் படுப்பதுவும் இன்றி கெடும்
87. அளவரிந்து செய்யாத தானம் அலைகடலில் கரைத்த உப்பாய் கெடும்
88. களவாடி வந்த பொருள் களவாடக் கெடும்
89. காய்க்காத மரமும் கெடும்
90. முடவன் செய்த குடம் முடங்கிக் கெடும்
91. முட்டாளின் செயலால் ஊரே கெடும்
92. முளைக்காத பயிரும் கெடும்
93. பயிரோடு ஊடுருவிய களையால் நற்பயிறும் கெடும்
94. உன் உள்ளத்தில் ஊடுருவிய சந்தேகம் உன்னையே கெடுக்கும்
95. தியானிக்க வினை யாவும் கெடும்
96. தியாகத்தால் அறியா பாவமும் கெடும்
97. நூலின் தன்மை நூற்பதனால் கெடும்
98. நூலின்தன்மை வாசகர் இல்லை யென்றால் கெடும்
99. நாணயத்தின் தன்மை நாவால் கெடும்
100. நாணயத்தின் மதிப்பு விலை ஏற்றத்தால் கெடும்
101. நாவின் தன்மை சொல்லால் கெடும்;
102. நோயின் தன்மை நோவால் கெடும்
103. வேரில்லா மரமும் கெடும்
104. தேவனை சுமக்கும் மனமும் கெடும்
105. வேர்வை இல்லா உழைப்பும் கெடும்
106. வேசிகளின் தொடர்பால் உடல் கெடும்
107. வேசம் போடுபவனால் எல்லாம் கெடும்
108. வேலையில்லாமல் வரவு கெடும்
109. வேதனை சுமந்தால் உறவு கெடும்
110. வேலி இல்லாமல் பயிர் கெடும்
111. போரின்றி வீரம் கெடும்
112. போக்கிடம் இன்றி வாழ்வு கெடும்
113. நீரின்றி உயிர் பயிர் கெடும்
114. நியாம் இன்றி நீதி நெறி கெடும்
115. பகையின்றி வேந்தன் புகழ் கெடும்
116. புகையின்றி நெருப்பு கெடும்
117. தனி மனிதன் தற்பெருமையால் புகழ் கெடும்
118. நல்லறம் இன்றி இல்லறம் கெடும்
119. நல்லவன் இன்றி நாடே கெடும்
120. நாளை நாளை என்றால் முயற்சி கெடும்
121. தன்மை இல்லா தாய்மை கெடும்
122. தூய்மை இல்லா வாய்மை கெடும்
123. பொறிகெடும் பொய்யான வாழ்வு கெடும் நெறிகெடின்
124. பொய்யான அழகும் கெடும்
125. ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் நன்வினை கெடும்.
126. செய்த நம்மையை அறியாவிடின் செய் நன்றி கெடும்
127. நல்லியல்பு மாறினால் நலம் கெடும்;
128. புலவியுணரார் மாட்டுப் புலத்தல் கெடும்.
129. புற் பூண்டு இல்லா பூமி தன் தன்மை கெடும்
130. புத்திரர்கள் இல்லாமல் பெண்மையின் தாய்மை கெடும்
131. கற்றல் இல்லாமல் அறிவு கெடும்
132. குடியால் குடி கெடும்
133. மனம் இல்லாமல் மாற்றம் கெடும்
134. மணம் இல்லாத மலரும் கெடும்
135. மாளிகை வாழ்வில் நிம்மதிகெடும்
136. மற்றவருக்கு தீங்கு செய்யின் நாமே கெடுவோம்
137. மாற்றம் இல்லாத முன்னேற்றம் முன்னுக்கு வராமல் கெடும்
138. மழையில்லாத வேளாண்மை கெடும்
139. மாலையில்லா திருமணமும் கெடும்
140. மாலையில்லாமல் பொழுது கெடும்
141. வேலையில்லாமல் பிழைப்பு கெடும்
142. வேதனை சுமக்கும் இதயம் வெந்து நொந்தே கெடும்
143. பசி இல்லா வயிரும் படுத்து கிடக்கும் உடம்பும் படுத்தியே கெடும்
144. உழக்கரிசி மிஞ்சாத உழவும் கெடும்
145. ஒட்டாத பாசமும் கெடும்;
146. ஓடாத நீரும் கெடும்;
147. .எட்டாத வாய்ப்பும் ஏமாற்றத்தால் கெடும்
148. அழையவிடும் விழியும் கெடும்
149. அழைக்காத விருந்தும் கெடும்
150. தாங்காமல் உறவு கெடும்
151. தூங்கினால் வாழ்வு கெடும்
152. கருத்து கருத்து இல்லா எழுத்தே கெடும்
153. துடிப்பில்லா இளமை கெடும்
154. காடழிந்தால் நாடழிந்து கெடும்
155. கழனி அழித்தால் உணவின்றி உலகம் காய்ந்தே கெடும்
156. அச்சப்படும் கோழை கெடும்
157. இறைக்காத கிணறும் கெடும்
158. இறையாமை மறந்த தேசம் கெடும்;
159. இரக்கம் இல்லாத மனித நேயமும் கெடும்
160. தோகையில்லா மயிலின் அழகும் கெடும்
161. செறிக்காத உணவால் உடல் கெடும்
162. செழுமை இல்லா வாழ்வும் கெடும்
163. செழிப்பில்லா பயிறும் கெடும்
164. ஆறுகள் சேரா குளம் ஏரியால் நீரான்மை கெடும்
165. ஆருதல் வந்து சேரா வாழ்க்கை நிம்மதி நிலையின்றி கெடும்
166. வருமுன் காக்காதான் வாழ்க்கை நெருப்பின் முன் இட்ட வைக்கோல் போல் கெடும்
167. குறைபட வாழ்பவர் உள்ளம் படைபோல் பற்றியே கெடும்
168. முறைபட வாழாதார் வாழக்கை சிறையுண்டு சிதைந்தே கெடும்
169. நல்லாரை நல்லார் இலர் என்று நாணுபவர் அல்லாரை வள்ளார் என்று நம்பி கெடுவர்
170. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை மாந்தர்க்கு கண்கண்ட கணவனைப் போல் தெய்வமில்லை, கடமை மறந்த கனவர் கொடியோன் போன்று கெடுவர்;
171. ஈத்துண்பான் இறையாவான், கைத்துண்பான் கயவனாவான்
172. வை(ழி)த்துண்பான் வழிதடுமாறி கெடுவான்
173. நுணலும் வாயால் கெடும்
174. நுழைவாயில் இல்லா வீடும் கெடும்
175. நுழையாத சொல்லும் கெடும்
176. நுட்பம் நுணுக்கம் இல்லாத செயலும் கெடும்
177. மோப்பம் பிடிக்காத நாயும் கெடும்
178. நோம்பு இல்லாமல் உடம்பு கெடும்
179. தேடாத உறவும் கெடும்
180. தெகிட்டும் விருந்தும் கெடும்
181. பகட்டு வாழ்வும் கெடும்
182. குறிக்கோள் இல்லாத கொள்கையும் கெடும்
183. குறை கூறும் வாயே கெடும்
184. அவநம்பிக்கையால் தன்நம்பிக்கை கெடும்
185. அவமானத்தால் தன்மானம் கெடும்
186. ஈன்றவன் இன்னா செயினும் ஒன்றை நன்றென்று நினைத்தால் அவர் இழைத்த துன்பம் யாவும் கெடும்
187. குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்
188. குறிக்கோள் பிசகினால் வெற்றி கெடும்;
189. கோபம் கொள்பவர் முன் நன்மைகளும் கெடும்
190. கறுவாமையை விட மறமை இருப்பின் அவன் செய்த இழயலாமையும் கெடும்
191. மறவாமை விட கறுவாமை இருப்பின் அவன் செயல் ஆற்றல் இயலாமையால் கெடும்
192. பழிப்பின்மை கொழிப்பின்மை போற்றாதார் போற்றினாலும் நட்பின்மையால் கெடும்
193. திரியழல் சிறிதெனினும் தீண்டின் சுடும் சிறிய தவறாயினும் தீயாய்சுட்டே கெடும்
194. பொய்மையில் உண்மை கெடும்
195. அடக்கமுடமை ஆக்கமுடமையாக்கும்
அடங்காமை அழிவால் கெடும்
196. உடன்படும் தனிமையால் முதுமை கெடும்
197. உடன்பாடு இல்லாத இல்லறம் கெடும்.
198. ஆலயம் செல்லாமல் தெய்வீகம் கெடும்
199. இரக்கமில்லா மனிதம் கெடும்.
200. இருக்கம் உள்ள இதயம் இடிந்தே கெடும்
201. உறக்கம் இல்லாத உடம்பு உருகியே கெடும்;
202. இல்லால் இல்லாத இல்லம் சொல்லாமல் கெடும்
203. கெடும்‌ காலம்‌ கெட்டொழித்தே கெடும்
204. படும் காலம் படுத்தியே கெடும்
205. வினைவலிமை பகை வலிமை காணாதான் வலிமை தன் வலிமை குன்றக் கெடும்
206. அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை இருப்பது போல் இல்லாததாய் கெடும்
207. மனம் உவந்து வாழாதான் வாழக்கை மதி கெட்டு மானம் கெட்டு கெடும்
208. பண்பில்லா குணம் பகையாய் கெடும்
209. அன்பில்லா குணம் அரக்கக் குணமாய் கெடும்
210. .அன்புடைமை,' அறிவுடைமை அடக்கமுடமை, அருள் உடமை, ஈகையுடமை, பண்புடைமை, பனிவுடமை ,இல்லையேல் ; பொன் பொருள் மக்கள் செல்வம் புகழ் உடமைகள் இருந்தும் கெடும்
அன்பன் அ. முத்து வேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (27-Aug-22, 9:30 pm)
பார்வை : 75

மேலே