வேத வாக்கு
மண்ணில் பிறந்தவர்கள்
எல்லோரும்
நல்லவர்கள் தான்.
ஒவ்வொருக்கும்
ஒரு விதமான குணமுண்டு
என்பது பிறப்பின் இயல்பு....!!!
மனிதர்களை
நல்லவன் என்றும்
கெட்டவன் என்றும்
சொல்வது அவர்களது
குணத்தை வைத்துதான்...!!
வாழ்க்கை முறையும்
நம்மை சுற்றி இருக்கும்
மனிதர்களின்
செயல்பாடுகள் தான்
நம் வாழ்க்கையின்
வழிகாட்டிகள்...!!
உன் நண்பன்
யாரென்று சொல்
நீ யாரென்று
நான் சொல்கிறேன்
என்பது ஆழ்ந்த
கருத்துள்ள வாசகம்...!!
வாழும் வரை
போராட்டம் என்பது
மனித வாழ்வின்
எழுதப்படாத விதி தான்...!!
ஆனால்...
உன் மதியால்
அதனை வென்று
பாதை தவறாமல்
பயணம் செய்தால்
உன் வாழ்க்கையில்
வெற்றி நிச்சயம் என்பது
வேத வாக்கு...!!
--கோவை சுபா