ஆகாயம் இடமாய் வாக்கு வந்து வசனிக்கும் - உண்மை விளக்கம் 15

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
(’க்’ ‘ற்’ வல்லின எதுகை)

வாக்(கு)ஆகா யம்இடமாய் வந்துவச னிக்குங்கால்
போக்காரும் காற்றிடமாய்ப் புல்கியனல் – ஏற்கும்
இடுங்கை குதநீ ரிடமாய் மலாதி
விடும்பா ரிடம்உபத்தம் விந்து. 15

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

ஆகாயமிடமாக நின்று வாக்குப் பொருந்தி வார்த்தை சொல்லும்,

வாயுவினிடமாக நின்று பாதம் கமனஞ் செய்யும்,

தேயுவினிடமாக நின்று பாணி இடுதல் ஏற்றல் செய்யும்,

அப்புவினிடமாக நின்று பாயு மலசலங்களைப் பிரித்தல் செய்யும்,

பிருதிவியினிடமாக நின்று உபத்தம் விந்துவை விடுத்து ஆனந்தஞ் செய்விக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Aug-22, 11:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே