கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள் - உண்மை விளக்கம் 14
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
கண்ணுதல்நூல் ஓதியிடும் கன்மேந் திரியங்கள்
எண்ணு(ம்)வச னாதிக் கிடமாக – நண்ணியிடும்
வாக்குப்பா தம்பாணி மன்னு குதமுபத்த
மாக்கருது நாளும் அது! 14
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
வாக்கு, பாதம், பாணி, பொருந்திய பாயு, உபத்தமாகக் கருதுகின்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும்,
மதிக்கின்ற வசனமும் கமனமும் தானமும் விசர்க்கமும் ஆனந்தமுமாகி யவற்றிற்கு இடமாக நாடோறும் பொருந்தும் என்று சிவாகமம் செப்பும்.