தாயே என் தாயே
தாயே என் தாயே!
--'''------''''--''--
கருவாக்கி வயிற்றினிலே காத்தாயே நீயே //
உருவில்லா எனக்குமொரு உருவம் தந்தாயே //
சுகமான சுமையினைச் சுமந்தாயே அன்னை //
அகத்தோடு புறத்தினிலும் அணைத்தாயே என்னை //
துயரங்கள் ஏற்றுநீ தேறிடவே செய்வாய் //
உயரங்கள் நான்காண உழைப்பாயே மெய்யாய் //
மலரும்உன் சிரிப்பாலே புலர்ந்திடுமென் காலை //
பலர்வந்து புகழ்ந்தாலே செழித்திடுமென் பாலை //
தோளேறி விளையாடும் தோழியென ஆனேன் //
வாளேந்தும் மகனையும் வீழ்த்திடுவேன் நானே !!
-யாதுமறியான்.