அந்தப் பேரை வைக்க வேண்டாம்னு சொன்னேன்

ஏன்டா கண்ணையா, அந்தப் பேரை உம் பையனுக்கு வைக்க வேண்டாம்னு சொன்னேன். கேட்டீங்களா?
@@@@
என்னம்மா சொல்லற?
@@@@@@
அங்க பாரு. இரண்டு வயசுலயே உம் பையன் கண்ணாடி போட்டுட்டு இருக்கிறான்.
@@@@@@
கண்ணாடி போட்டுட்டு இருக்கிறதுக்கும் பேருக்கும் என்னம்மா சம்மந்தம்?
@@@@@@
ஏன் கண்ணாடி போட்டுட்டு இருக்கிறான்?
@@@@@@
கண்ணு மங்கலாத் தெரியுதுனு சொன்னான். அதுதான் அவனுக்கு கண்ணாடி போட்டேன்.
@@@@@@@
அவனுக்கு 'மங்கல்'னு பேரு வைக்கிற போதே சொன்னேன். கேட்டீங்களா?
@@@@@@
நீ சொன்னது சரிதாம்மா. எல்லாரும் இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கிறாங்களேன்னு நானும் அந்த சோசியர் சொன்ன பேரை பையனுக்கு வச்சுட்டேன். அந்தப் பேருக்கு என்ன அர்த்தமோ?
@@@@@
சரி இனியாவது அவனுக்கு வேற நல்ல தமிழ்ப் பேரை வச்சிடு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mangal = Auspicious, Mars.