நகரும் வெளிச்ச புள்ளிகள்

நகரும் வெளிச்ச புள்ளிகள்

காரிருளில்
மலைபாதை ஒன்றில்
வளைந்து வளைந்து
செல்லும்
கருப்பு கோடுகளாய்
பாதை

கண்ணுக்கு
தெரியாவிட்டாலும்
இரு புறம்
போவதும் வருவதுமாய்
நகரும்
வாகனத்தின்
வெளிச்ச புள்ளிகள்

பாதை இருப்பதை
காட்டி நிற்கின்றது

சமவெளியில்
நின்று இவளை
நோக்க

இருளில் வரைந்த
அழகோவியமாய்

கழுத்தில்
பாதை என்னும்
நூலில்


மின்னிடும் முத்துக்கள்
கோர்த்து

அவைகள்
அங்கும் இங்கும்
அசைவது போல்
தெரிகிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Sep-22, 4:32 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 78

மேலே