மலரைத் தொடச் சென்றேன் மௌனமாய் மறுத்தது

மலரைத் தொடச் சென்றேன்
மௌனமாய் மறுத்தது
ஏன் தென்றலை மட்டும்
தொட அனுமதிக்கிறாய் என்றேன்
தென்றல் தொட்டுத்தான்
நான் மலர்கிறேன்
கரத்தால் அல்ல
கவிதையால் நீ தொடு என்றது மலர்
அவள் வந்தாள் தொட்டுப் பறித்தாள்
கூந்தலில் சூடினாள்
மகிழ்ந்து சிரித்தது மலர்
ஏனிந்த பாரபட்சம்
முகம் சுளித்தேன் நான்
அவளும் நீயும் ஒன்றல்ல
அவள் விரல்கள் என்னிதழ்களிலும்
மென்மையானது
தென்றலிலும் குளிர்ச்சியானது
ஆதலால் கவிஞ
என்னைக் கவிதையால் மட்டும்
நீ தொடு
அவள் கூந்தலில் அமர்ந்து
சிரித்து விடை பகர்ந்து
அந்த மென்மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Sep-22, 6:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே